பல் பரிசோதனை
Please follow and like us:

இடது பக்க தாடையின் கீழ்வரிசையில் இறுதிபல்லாக ஞானப்பல் (Wisdom tooth) என்றொரு பல் வளரும். பொதுவாக இது இருபது வயதிற்கு மேற்பட்டு தான் வளரும். எமக்கு விவரம் தெரிந்த பின் வளர்வதால் இதனை ஞானப்பல் என்கிறார்கள். இது ஒரு சிலருக்கு இரண்டு கீழ் தாடையிலும் இரண்டு இரண்டு என நான்கு பற்கள் கூட முளைக்கும். ஒரு சிலருக்கு இவை முளைக்காமல் கூட இருக்கும். ஒருசிலருக்கு இது பாதி வளர்ந்து மீதி ஈறுகளுக்குள்ளேயே இருந்துவிடும். இதனால் எல்லாம் பிரச்சினை இல்லை. ஆனால் இத்தகைய பற்கள் உருவாகும் போது அவை கோணல்மாணலாக இருந்துவிட்டால் தான பிரச்சினை பல் வலி உயிரை எடுக்கும்.இதனை ஒரு சிலர் நாளடைவில் சரியாகிவிடும் என்று வலியை தாங்கிக் கொண்டோ அல்லது வலி நிவாரணிகளை மட்டும் பயன்படுத்துவிட்டோ கடந்தால், இதுவே வாய் புற்றுநோய்க்கு காரணமாகவும் மாறிவிடும் வாய்ப்பு இருப்பதால், இத்தகைய பல் வலி வந்தவுடன் அருகிலிருக்கும் பல் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனைப் பெறுங்கள்.

ஒரு சிலருக்கு இதன் போது தாடையில் வலி அதிகமாக இருக்கும். அவர்கள் மருத்துவர்களை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அவர்கள் அந்த பற்களை அகற்றுமாறு சொல்லிவிட்டால் உடனடியாக அதற்கு அனுமதியளிக்காமல் செகண்ட் ஓப்பினியன் கேளுங்கள். ஏனெனில் பெரும்பாலான தருணங்களில் ஞானப்பல் கோணலாக வளரும் போது, மேல தாடையில் உள்ள பற்கள், நேரடியாக கீழ் தாடையில் உள்ள பற்களின் ஈறுகளின் மீது படுகிறது. இதன் காரணமாகவும் வலி ஏற்படக்கூடும். இத்தகைய தருணங்களில் பல் மருத்துவர்கள் மேல் தாடையிலுள்ள பற்களை தேய்ந்து அளவில் சற்று சிறியதாக்கிவிடுவார்கள். இதன் காரணமாக வலி குறைந்துவிடும். ஈறுகளின் வீக்கத்திற்கு மட்டும் மருந்து சாப்பிட்டால் போதும். சத்திர சிகிச்சை தேவையில்லை. ஆனால் அளவுக்குறைக்கப்பட்ட பல் மீண்டும் வளர்ந்து, மீண்டும் பல் வலி ஏற்பட்டால் எச்சரிக்கையுடன் யோசித்து அந்த பல்லை அகற்றிவிடுவது தான் சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *